தேசியம்
செய்திகள்

தகுதியான அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கனடாவிடம் உள்ளது

கனடாவில் இப்போது தகுதியான அனைத்து குடிமக்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான COVID தடுப்பூசிகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

கனடாவில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு தகுதியுள்ள நபருக்கும் முழுமையாக தடுப்பூசி போட போதுமான அளவு  தடுப்பூசிகள் உள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடா பெற்றுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமரின் இந்த அறிவிப்பை கூறினார்.

இந்த  வார இறுதிக்குள் கனடாவுக்கு 68 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, தகுதியானவர்களில் 80 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை கனடாவில் பெற்றுள்ளனர்.அதே நேரத்தில் தகுதியுள்ள  கனடியர்களில் 63 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

தகுதியான 33 மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்களில் 26 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்போம்: இந்திய பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan

40 மில்லியனை தாண்டிய கனடாவின் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Lankathas Pathmanathan

Leave a Comment