Torontoவின் மேற்கு முனையில் புதன்கிழமை ஒரு முகாமை, நகர குழுவினர் அகற்றியபோது காவல்துறையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டன. இதில் ஒரு Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளார்.
Torontoவின் Lamport மைதானத்தில் முகாமிட்டிருந்தவர்களை அகற்றிய Toronto காவல்துறையினர், 22 பேரை கைது செய்தனர்.
புதன்கிழமை காலை, Toronto காவல்துறை அதிகாரிகளும் நகரக் குழுவினரும் June 12 அன்று வழங்கப்பட்ட மீறல் அறிவிப்புகளை அமுல்படுத்துவதற்காக Lamport மைதானத்தில் நுழைந்தபோது எதிர்ப்பாளர்களுடன் வன்முறை மோதல்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தில் எவருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.