தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் என பிரதமர் கூறினார்.
கனடா எந்தவொரு சுற்றுலா பயணிகளையும் இன்னும் சிறிய காலத்திற்கு வரவேற்கத் தயாராக இல்லை என பிரதமர் Justin Trudeau கூறினார். கனேடியர்களின் பாதுகாப்பை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் என British Columbiaவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Trudeau தெரிவித்தார்.
தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பாதிக்க விரும்பவில்லை எனவும் பிரதமர் கூறினார்.
தங்கள் கோடைகாலம் எவ்வாறு இருக்கும் என திட்டமிட அனுமதிக்கும் ஒரு திட்டத்தை முன்வைக்குமாறு மத்திய அரசிடம் சுற்றுலாத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.