கனடாவின் புதிய எல்லை விதிகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின.
வெளிநாடுகளிலிருந்து கனடா வரும் கனடியர்களுக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் தளர்வுக்கு வந்துள்ளது. Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் இரண்டை பெற்றுள்ளோர் சில கட்டுப்பாடுகளை எதிர் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலையோ, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலையோ இவர்கள் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும் இவர்கள் எல்லை கடந்து கனடாவுக்குள் நுழைவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர், முழுமையான தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும்.
அதேவேளை தமக்கு COVID தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை, 72 மணி நேரத்துக்குள் செய்திருக்க வேண்டும் என்பதும் தகமையாகவுள்ளது. சில பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மாறியுள்ள நிலையில், எல்லை தாண்டுவதற்கான தகுதித் தேவைகள் மாற்றமடையவில்லை என கனடா எல்லை சேவைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டுகளின் தளர்வு ஒரு மாற்றத்தை குறிப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.