பசுமை கட்சியின் தலைவி Annamie Paul அடுத்த மாதம் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.
விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படும் பொது தேர்தலுக்கு முன்னதாக உட்கட்சி தேர்தல் ஒன்றை பசுமை கட்சி எதிர்கொள்ள உள்ளது. கட்சியின் கூட்டாட்சி மன்றத்தின் தலைவி Liana Cusmano இந்த தகவலை வெளியிட்டார்.
கட்சி நிர்வாகிகள் July மாதம் 20ஆம் திகதி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சி அளவிலான வாக்கெடுப்புக்கு செல்வதற்கு 13 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் குழுவின் 75 சதவீத வாக்குகள் தேவைப்படுகிறது.