Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
Nova Scotia – New Brunswick மாகாணங்களை இணைக்கும் Trans-Canada நெடுஞ்சாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது
Nova Scotia அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு மாகாணங்களுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டது. New Brunswickகில் இருந்து Nova Scotia பயணிப்பவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு காரணமாக இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.