தேசியம்
செய்திகள்

வதிவிடப் பாடசாலைகள் குறித்து வேதனை தெரிவித்த போப்பாண்டவர் – மன்னிப்பு கோர மறுப்பு

British Colombia முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில்  215 மாணவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போப்பாண்டவர் Francis தனது வேதனையை தெரிவித்தார்.

இந்த வார ஞாயிறு ஆராதனையின் போது இது ஒரு சோகமான சம்பவம் என போப்பாண்டவர் வர்ணித்தார். இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த மத மற்றும் அரசியல் அதிகாரிகளை அவர் கோரினார். ஆனாலும் கனேடிய பிரதமர் கோரிய மன்னிப்பை போப்பாண்டவர்  தனது உரையில்  வழங்கவில்லை.

வதிவிட பாடசாலைகளுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருமாறு கத்தோலிக்க திருச்சபையை  கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த வெள்ளிக்கிழமை வலியுறுத்தியிருந்தார். ஆனாலும் வதிவிடப் பாடசாலை விடயத்தில் கத்தோலிக்க திருச்சபை குறித்த பிரதமர் Trudeauவின் கருத்து நியாயமற்றது என கனேடிய பேராயர் Cardinal Thomas Collins கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது  

 இந்த நிலையில்  வதிவிடப் பாடசாலை விடயத்தில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஒரு பகிரங்க மன்னிப்பு  அவசியம் என முதற்குடியினர் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

Conservative கட்சி உறுப்பினர்களின் தெரிவு Poilievre – கனடியர்களின் தெரிவு Charest!

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment