எதிர்வரும் கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்ய கோரும் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
முதற்குடியினரின் முன்னாள் வதிவிட பாடசாலையில் 215 மாணவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. Cancel Canada Day என்ற hashtag உடனான பிரச்சாரம் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது.
கனடா தினம் வதிவிட பாடசாலைகளில் இழந்த உயிர்கள் உட்பட பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பிரதிபலிக்கும் நாளாக இருக்க வேண்டும் என பலர் வாதிடுகின்றனர். முதற்குடியினரின் உரிமைகள் குழுவான Idle No More திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் July 1 ஆம் திகதி கனடாவின் பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.