அடுத்த மாதம் கனடாவுடனான எல்லை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என்ற அறிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்தது.
கனடாவுடனான எல்லையை எப்போது அல்லது எப்படி மீண்டும் திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்தது. கடந்த வருடம் March மாதம் முதல் நடைமுறையில் உள்ள எல்லை கட்டுப்பாடுகள் June மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என்பதைத் தவிர எல்லை குறித்து எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கூறினார்.
June மாதம் 22ஆம் திகதியுடன் எல்லை கட்டுப்பாடு நீக்கப்படும் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடைய அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆனாலும் கனடிய அரசாங்கம் இந்த செய்தியை வெளிப்படையாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
மாறாக கனேடியர்களில் 75 சதவீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் தான் எல்லை கட்டுப்பாடு நீக்கப்படும் என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது