கனடாவில் உள்ள தனது நாட்டின் தூதரகத்தை மூட Belarus முடிவு செய்துள்ளது.
Belarus குடியரசு அரசு இந்த அறிவித்தலை விடுத்தது. தூதரகம் September மாதம் 1ஆம் திகதி முதல் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும். ஆனால் visa விண்ணப்பங்கள் மற்றும் பிற ஆவணங்களை செயலாக்குவது போன்ற தூதரக சேவைகள் July மாதம் 10 ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பத்திரிகையாளரை கைது செய்த விடயத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau, Belarus அதிகாரிகளை கண்டித்துள்ள நிலையில் இந்த அறிவித்தலை Belarus அரசாங்கம் அறிவித்தது. ஒரு அதிருப்தி பத்திரிகையாளரை கைது செய்ய ஒரு பயணிகள் விமானத்தை Belarus கட்டாயமாக திசை திருப்பியது குறித்து மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.