தேசியம்
செய்திகள்

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

வெளிநாட்டு பயணங்களின் பின்னர் தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளின்  தனிமைப்படுத்த மறுத்ததற்காக கனடாவுக்கு வரும் 798 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் 606 பேர் Ontarioவிலும் 192 பேர் British Columbiaவிலும் அபராதங்களை பெற்றுள்ளனர். இந்த அபராதங்கள் February மாதம் 22ஆம் திகதி முதல் May மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. Quebecகில் இதுபோன்ற அபராதங்கள் வழங்கப்பட்டதாக எந்த பதிவுகளும் இல்லை என பொது சுகாதார நிறுவனம் கூறியது. 

Related posts

முன்கூட்டிய தேர்தலுக்கு தயாராகுமாறு வேட்பாளர்களுக்கு எச்சரித்த NDP

Lankathas Pathmanathan

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் Jason Kenney

Lankathas Pathmanathan

Justin Trudeauவின் தலைமையை Brian Mulroney பாராட்டினார்!

Lankathas Pathmanathan

Leave a Comment