December 12, 2024
தேசியம்
செய்திகள்

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

AstraZeneca தடுப்பூசியின் பயன்பாட்டை மேலும் சில மாகாணங்கள் கட்டுப்படுத்துகின்றன.

Nova Scotia மாகாணமும்  முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்குவதில்லை என புதன்கிழமை முடிவு செய்துள்ளது. Ontario, Alberta, Saskatchewan, Quebec ஆகிய மாகாணங்களும் இதேபோன்ற முடிவை செவ்வாய்கிழமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் தனது முடிவை  Nova Scotia அறிவித்தது. Nova Scotiaவின் முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Robert Strang இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அறிவியலின் அடிப்படையில் அதிகரித்த விநியோகத்தின் அடிப்படையிலும்  இந்த முடிவு எடுக்கப்பட்டது என Strang கூறினார். AstraZeneca தடுப்பூசியின் காரணமாக இரத்த உறைவு குறித்த முறைப்பாடுகளும் மரணங்களும்  கனடாவில் பதிவாகியுள்ளன. ஆனாலும் Novo Scotiaவில் இந்த இரத்த உறைவு காரணமாக மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

AstraZeneca தடுப்பூசியின் வழங்களில் சில கட்டுப்பாடுகளை Manitoba மாகாணம் அறிவித்துள்ளது. வேறு தளங்களில் நோய்த்தடுப்பு செய்யப்படாதவர்களுக்கு மட்டுமே AstraZeneca தடுப்பூசியை வழங்க Manitoba முடிவு செய்துள்ளது

 20 இலட்சம் பேர் இதுவரை கனடாவில்  AstraZeneca தடுப்பூசியை பெற்றுள்ளனர். அவர்களின் 17 பேர் இரத்த உறைவு குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்தனர். மூன்று பெண்கள் கனடாவில் இந்த இரத்த உறைவு காரணமாக மரணமடைந்துள்ளனர்

அடுத்த வாரம் Ontario 2 இலட்சத்து 50 ஆயிரம் AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ளது. அவை ஏற்கனவே AstraZeneca தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது ஊசியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Liberal அரசாங்கத்தின் அணுகுமுறை வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பை தூண்டியது: O’Toole குற்றச் சாட்டு!

Gaya Raja

COVID உதவி நலத் திட்டங்களை நீட்டிக்க அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொள்கிறது!.

Gaya Raja

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Lankathas Pathmanathan

Leave a Comment