தேசியம்
செய்திகள்

திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!

COVID  தடுப்பூசி வழங்கப்படுவதற்கு  விரிவாக்கப்பட்ட தகுதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை திங்கட்கிழமை மேற்கொண்டனர்.

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்வது குறித்து Ontarioவின் சுகாதார அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

திங்கள்  காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் 73 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டதாக அமைச்சர் Christine Elliott கூறினார்.  Hotspot எனப்படும் தொற்று அதிகமாக பரவும் 114 பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் திங்கள்  காலை முதல் தடுப்பூசிக்கான முன் பதிவு மேற்கொண்டனர்.

இந்த வாரமும் அடுத்த வாரமும்  Ontario மாகாணம் அதன் தடுப்பூசி விநியோகத்தின் அரைவாசியை தொற்று அதிகம் உள்ள hotspot பகுதிகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.  

Related posts

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja

2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது

Lankathas Pathmanathan

N.W.T. பயணிகள் விமான விபத்து

Lankathas Pathmanathan

Leave a Comment