இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்து கனடா வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.
சுகாதாரம், குடிவரவு, போக்குவரத்து, பொது பாதுகாப்பு, Intergovernmental அமைச்சர்கள் இணைந்து வியாழக்கிழமை மாலை நடத்திய ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியானது. வியாழக்கிழமை இரவு 11:30 மணி முதல் (EST) 30 நாட்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாடுகளிலிருந்தும் தொற்றால் பாதிக்கப்பட்ட சோதனை முடிவுகளுடன் கனடாவுக்கு அதிகமான பயணிகள் வருவதால் இந்த தற்காலிக தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்தார். COVID தொற்றின் புதிய திரிபு அந்த நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
கனடாவில் புதிய திரிபு பரவுவதைத் தடுக்க அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.