கனடாவின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதமானவர்கள் இதுவரை குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
கனடாவில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 7,276 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 3,469, Albertaவில் 1,345, Quebecகில் 1,136, British Columbiaவில் 849, Saskatchewanனில் 249, Manitobaவில் 211, Nova Scotiaவில் 9, Nunavutரில் 5, Newfoundland and Labradorரில் 2, Prince Edward Islandடில் 1 என தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 22, Quebecகில் 17, Albertaவில் 5, British Columbiaவில் 1, Manitobaவில் 1 என மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமையுடன் கனடாவில் 1,139,043 தொற்றுகளும், 23,713 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன், 1,027,458 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.