தேசியம்
செய்திகள்

20 -30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் தொற்றின் மூன்றாவது அலை!

COVID தொற்றின் மூன்றாவது அலை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பொது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கத் தவறியதே இதற்கான காரணமாகும் என கூறப்படுகிறது. British Columbia முதல்வர் John Horgan, Quebec முதல்வர் Francois Legault ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இளைய வயதினரிடையே அதிகரிக்கும் தொற்று அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Quebecகில் உள்ள இளைஞர்கள் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என மாகாண ஆய்வு முடிவுகளை முதல்வர் Legault மேற்கோள் காட்டினார். Quebec மாகாண தகவல்கள் 59 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்களிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதத்தை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை March மாதத்தில் 34.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது February மாதத்தில் 28.9 சதவீதமாகவும், January மாதத்தில் 25.5 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போகும் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் குறித்து காவல்துறை விசாரணை

Lankathas Pathmanathan

Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

கனேடிய தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment