June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்படுகின்றது.
March மாத இறுதிக்குள் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என நேற்று கனடிய பிரதமர் அறிவித்திருந்தார். இவற்றில் 4 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் March 8ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்திலும் 8 இலட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் March 22ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்திலும் கனடாவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது. இன்று Major General Dany Fortin இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இதேவேளை March மாத இறுதிக்குள் Pfizer 4 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.