இந்த மாதத்திற்கான Moderna COVID தடுப்பூசி விநியோகங்களில் மேலும் இடையூறு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மாதத்தில் Modernaவிலிருந்து தடுப்பூசிகளை வழங்குவதில் மேலும் இடையூறுகளை எதிர்கொள்ளலாம் என மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கான Modernaவின் ஏற்றுமதி ஏற்கனவே இந்த மாதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான Moderna இந்த மாதம் எதிர்பார்க்கப்படும் தடுப்பூசி ஒதுக்கீட்டில் சுமார் 78 சதவீதத்தை மட்டுமே அனுப்பிவைக்கும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கனடா 230,400க்கு பதிலாக 180,000 தடுப்பூசிகளை மாத்திரம் பெறும் நிலை தோன்றியுள்ளது. ஆனாலும் March மாத இறுதிக்குள் கனடா உறுதிப்படுத்தப்பட்ட 2 மில்லியன் தடுப்பூசிகளை Modernaவிடமிருந்து பெறும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.