தேசியம்
செய்திகள்

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை – கனடிய தமிழர் பேரவை கவலை

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடிய தமிழர் பேரவை தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இன்று (வெள்ளி) வெளியான அறிக்கை ஒன்றில் CTC எனப்படும் கனடிய தமிழர் பேரவை இந்த விடயத்தில் தனது கவலையை வெளியிட்டது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையை வரவேற்பதாகவும் CTC இன்றைய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை மிக முக்கியமான, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது எனவும் CTC சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயத்தில் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கைகளை எடுக்க கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை சர்வதேசமும், கனடாவும் எடுக்க வேண்டுமென தாம் தொடர்ந்து உழைத்து வருவதாகவும் CTC குறிப்பிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது Magnitsky சட்டத்தின் அடிப்படையில் தடைகளை ஏற்படுத்த வேண்டுமெனக் கனடிய அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக கோரி வருவதையும் CTC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் கனடிய வெளியுறவு அமைச்சர் François Philippe Champagneனுக்கு இந்த விடயங்களை வலியுறுத்தி கடந்த வருடம் இரண்டு தடவைகள் கடிதங்களை எழுதியுள்ளதையும் CTC சுட்டிக்காட்டியுள்ளது. கனடிய அரசு இந்த வழிகளில் இன்னும் அர்த்தமுள்ள எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்பதை ஏமாற்றமளிக்கும் ஒரு விடயம் என CTC கூறுகின்றது. கனடாவின் செயலற்ற தன்மை இலங்கையைத் துணிச்சலாகவும் பொறுப்பற்றதாகவும் தைரியப்படுத்துகிறது என குறிப்பிட்டத்துடன், கனடிய அரசு விரைவாகவும் விரிவாகவும் இலங்கை அரசின் மீது நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடியத் தமிழர் பேரவை தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

Edmontonனில் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் குறிவைத்து கொலை

Lankathas Pathmanathan

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடலாம்

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

Leave a Comment