தேசியம்
செய்திகள்

சொந்த செலவில் கட்டாயத் தனிமைப்படுத்தல் – கனடிய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள்!

COVID தொற்றின் பரவலை கட்டுப்பதும் முயற்சியாக கனடிய பிரதமர் Justin Trudeau புதிய பயண கட்டுப்பாடுகளை இன்று (வெள்ளி) அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் நிர்வகிக்கப்படும் தொற்று பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கும்போது நியமிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டார். நாடு திரும்பும் அனைத்து கனடியர்களும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கும்போது, தங்கள் சொந்த செலவில் மூன்று நாட்களுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட விடுதியில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இன்று பிரதமர் அறிவித்தார்.

இந்தத் தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டுக்கு ஒவ்வொரு பயணிக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக டொலர்கள் செலவாகும் என பிரதமர் Trudeau கூறினார். எதிர்மறை சோதனை முடிவுகளைக் கொண்டவர்கள் வீட்டிலேயே இரண்டு வாரங்கள் கட்டாயமாக தனிமைப்படுத்த முடியும் எனவும் நேர்மறையான சோதனை முடிவுகளை கொண்டவர்கள் நியமிக்கப்பட்ட அரசாங்க விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பிரதமர் Trudeau தனது அறிவித்தலில் தெரிவித்தார்.

அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் Vancouver, Toronto, Calgary, Montreal ஆகிய நான்கு விமான நிலையங்களில் மட்டுமே தரையிறங்க அனுமதி வழங்கப்படும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் வாரங்களில், அத்தியாவசியமற்ற பயணிகளும் கனடாவுக்குள் அமெரிக்காவுடனான நில எல்லையில் நுழைவதற்கு முன்னர் எதிர்மறையான சோதனை முடிவை காட்ட வேண்டும் என்ற நடைமுறையும் அமுலில் வருகின்றது

அதேவேளை கனடாவின் பிரதான விமான நிறுவனங்கள் Sun destinations எனப்படும் பிரபலமான விடுமுறை இடங்களுக்கான சேவையை நிறுத்தி வைக்கின்றன. இதற்கான இணக்கப்பாட்டை கனடிய மத்திய அரசும் கனடாவின் முக்கிய விமான நிறுவனங்களும் எட்டியுள்ளன.

Air Canada, WestJet, Sunwing, Air Transat ஆகிய விமான சேவைகள் அனைத்து Caribbean தீவுகளுக்கும் Mexicoவுக்குமான சேவையை ஞாயிற்றுக்கிழமை முதல் April 30ஆம் திகதி வரை நிறுத்தவுள்ளன. தற்போது பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் விமானம் நிறுவனம் மீண்டும் கனடா திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் Trudeau இன்று அறிவித்தார்.

Related posts

நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் புதிய இலக்கு

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ள பாப்பரசர்

Lankathas Pathmanathan

அமைச்சரவையில் இருந்து விலகினார் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment