தேசியம்
செய்திகள்

6.3 மில்லியன் பயணிகள் கனடாவில் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை

COVID தொற்று ஆரம்பமான காலம் முதல் கனடாவுக்குள் நுழைந்துள்ள
6.3 மில்லியன் பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை என தெரியவருகின்றது.

CBSA எனப்படும் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் புதிய புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்த தகவல் வெளியானது. இதில் truck ஓட்டுநர்கள், வணிகப் பொருட்களின் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பிற நபர்கள், அமெரிக்காவிற்கு வழக்கமாக பயணம் செய்யும் எல்லை தாண்டிய தொழிலாளர்கள், அமெரிக்கா அல்லது பிற நாடுகளிலிருந்து நேரடியாக விமானம் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் உள்ளனர்.

கடந்த March மாத இறுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து 8.6 மில்லியன் பயணிகள் கனடாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் 74 சதவீதமானவர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை என CBSA வழங்கிய புள்ளிவிவரங்களில் தெரியவருகின்றது

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக் குழுவை புதுப்பிக்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

புதிய அமைச்சர்களுக்கு ஆணை கடிதங்கள் வழங்கப்படவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment