December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடியர்களுக்கு விரைவில் பயணக் கட்டுப்பாடு: பிரதமர் Trudeau எச்சரிக்கை

கனடியர்களை மேலும் அதிக பயணக் கட்டுப்பாடுகளை விரைவில் எதிர்பார்க்குமாறு பிரதமர் எச்சரித்துள்ளார்

இன்று (செவ்வாய்) நடைப்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், பிரதமர் Justin Trudeau வெளிநாடுகளுக்கும் மாகாணங்களுக்கிடையிலுமான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வலியுறுத்தினார். ஏனைய நாடுகளிலிருந்து தொடர்ந்து வளர்ந்து வரும் புதிய தொற்றின் திரிபுகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தைத் தூண்டியுள்ளதாக அவர் கூறினார். இந்த விடயத்தில் விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனவும் பிரதமர் கூறினார்

புதிய பயண கட்டுப்பாடுகளை முன்னறிவிப்பின்றி கனடா விதிக்கக்கூடும் என பிரதமர் Trudeau கடந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

Toronto உயர் நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment