February 21, 2025
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

COVID பரவலை எதிர்கொள்ளும் வகையிலான கடமையாற்றும் தமிழ் கனடிய முன்கள பணியாளர்களின் பங்களிப்புக்கு கனடிய பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழன்) Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி ஏற்பாடு செய்த தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தொற்றின் மத்தியிலான இந்த கடுமையான நேரத்தில் தொடர்ந்து பணியாற்றும் ய தமிழ் கனடிய முன்கள பணியாளர்ளின் சேவையை பாராட்டினார். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதையும் இன்றைய தனது உரையின் போது பிரதமர் Trudeau கண்டித்துள்ளார்.

மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற இன்றைய கொண்டாட்டத்தில் அமைச்சர் அனிதா ஆனந்த, Toronto நகர முதல்வர் John Tory ஆகியோரும் உரையாற்றினர். தவிரவும் Liberal கட்சியின் அமைச்சர்களும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வுக்கு முன்னதாக தமிழ் கனடியர்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தமிழ் முன்கள பணியாளர்களுடனான ஒரு மெய்நிகர் நிகழ்வும் அழைக்கப்பட்ட விருத்தினர்களுடன் நடைபெற்றது.

Related posts

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Lankathas Pathmanathan

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  இறப்புகளின் எண்ணிக்கையும்   அதிகரிக்கலாம் – புதிய எச்சரிக்கை

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment