Brampton நகரசபையில் கனடிய தமிழர் சமூகத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Brampton நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் Martin Madeiros இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். தமிழர் சமூகத்துக்கு Bramptonனில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கான காரணங்களுள் ஒன்று என நகரசபை உறுப்பினர் Martin Madeiros தெரிவித்துள்ளார்.