COVID தொற்றாளர்கள் அதிகரித்த எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் கனடிய சுகாதார அதிகாரிகள் புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
மீண்டும் அதிகரிக்கும் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கனடியர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொற்றைக் கட்டுப்படுத்த மாகாணங்களும் பிராந்தியங்களும் பல்வேரு நகர்வுகளை முன்னெடுக்கின்றன.
Ontrarioவில் பரவலில் அதிகாரிப்பு அதிகம் உள்ள மூன்று இடங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Manitoba அதிகாரிகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தனர். Northwest பிரதேசம் Yellowknifeக்கான அவசரகால நிலையை புதுப்பிக்கின்றது. British Columbia உட்புற, பொது இடங்களில் முகமூடிகளை கட்டாயமாக்குவதுடன் மாகாண அளவிலான சமூகக் கூட்டங்களுக்கான தடையை நீட்டித்துள்ளது. Nunavutரில் தொற்றின் தொகை அதிகரித்துவரும் நிலையில் பிராந்திய அளவிலான இரண்டு வார முடக்கம் இன்று (வியாழன்) இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.