COVID தொற்று நோயை எதிர்த்துப் போராடுவது குறித்த கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman இந்தக் கருத்தை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையை யார் வெற்றி பெற்றாலும் கனடாவினால் கனடியர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய நிலையில் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் போராட்டமே கனடிய அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது எனவும் Hillman கூறினார்.