தேசியம்
செய்திகள்

COVID பரவலில் இருந்து பாதுகாப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

COVID தொற்றின் பரவலில் இருந்து கனடியர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பலவும் அறிவிக்கப்படுகின்றன.

Ontario முதல்வர் Doug Ford (Facebook)
Ontario பணிநிறுத்தங்களை எவ்வாறு விதிக்கும் என்பதில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. எப்போது பொது முடக்கங்களை விதிக்க வேண்டும் என்பதற்கான புதிய வரிசைப்படுத்தப்பட்ட முறையை Ontario  மாகாண அரசாங்கம் நேற்று (03) அறிமுகப்படுத்தியது
Calgary நகர முதல்வர் Naheed Nenshi (PHOTO BY GAVIN YOUNG/POSTMEDIA)

Alberta இந்த வார இறுதிக்குள் ஒரு நாளுக்கு 1,000 புதிய தொற்றுக்களை பதிவு செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக Calgary நகர முதல்வர் Naheed Nenshi எச்சரித்தார். இது மீண்டும் ஒரு முடக்கத்திற்கான  சாத்தியக்கூறுகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Saskatchewan முதல்வர் Scott Moe (Facebook)
Saskatchewan மாகாணமும் தனது சில முக்கிய நகரங்களில் முகமூடிகளை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளது. Regina, Saskatoon, Prince Albert ஆகிய நகரங்களில் முகமூடிகளை Saskatchewan முதல்வர் Scott Moe கட்டாயப்படுத்தியுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலில் வரவுள்ளது. இந்த பொது சுகாதார ஒழுங்கு 28 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் பின்னர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரியின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Aylmer நகர முதல்வர் Mary French (Facebook)

Ontarioவில் Aylmer நகரம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள  இரண்டாவது முகமூடி எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக இந்த அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. தனது ஒட்டுமொத்த அக்கறையும் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பும் நல்வாழ்வும் என இந்த முடிவு குறித்து Aylmer நகர முதல்வர் Mary French கூறினார்.

Related posts

பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியை பெற்றது Toronto!

Lankathas Pathmanathan

ரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து அவதானித்து வருகிறோம்: கனடிய பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment