February 21, 2025
தேசியம்
செய்திகள்

இரண்டாவது அலையைத் தடுக்க கனடியர்கள் தமது தொடர்புகளை 25 சதவீதம் குறைக்க வேண்டும் – தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam

COVID தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க கனடியர்கள் தமது தொடர்புகளை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் புதிய COVID modelling விபரங்கள் வெள்ளிக்கிழமை (30) வெளியாகின. தொற்றின் இரண்டாவது அலையின் modelling தரவுகளை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam வெள்ளிக்கிழமை வெளியிட்டார்

தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், கனடாவில் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க கனடியர்கள் தங்களின் தற்போதைய தொடர்பு விகிதத்தை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என வைத்தியர் Tam கூறினார். சமீபத்திய மாதங்களில் தொற்றின் பரவுதல் அதிகரித்துள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டிருந்தாலும், தொற்றின் பரவல் குறையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது

November மாதம் 8ஆம் திகதிக்குள் ஆயிரக்கணக்கான புதிய தொற்றுகளும் நூற்றுக்கணக்கான புதிய இறப்புகளும் கனடாவில் பதிவாகலாம் என புதிய modelling விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

Related posts

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

2024 Paris Olympics: கனடா ஏழாவது பதக்கம் வெற்றி!

Lankathas Pathmanathan

19 வயதான தமிழ் இளைஞரின் மரணம் ஒரு கொலை: காவல்துறையினர் தகவல்

Lankathas Pathmanathan

Leave a Comment