March மாதத்திலிருந்து, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய 77 கனடியர்கள் அபராதம் பெற்றுள்ளதுடன், ஏழு பேர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.
கனடிய பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி, இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.
கடந்த March மாதம் 25ஆம் திகதி கனடாவில் தனிமைச் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தொழிலாளர்கள் தவிர வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இந்த அவசரகால உத்தரவின் கீழ் உள்ளது
இதற்கு இணங்கத் தவறினால் 750,000 டொலர் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம்.