December 12, 2024
தேசியம்
செய்திகள்

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

பெண் ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வர்த்தகத்தில் வேலை செய்ய நிர்பந்தித்த தமிழர் ஒருவர் Durham காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Mississauga நகரைச் சேர்ந்த 30 வயதான நிதர்ஷன் எலன்சூரியநாதன் என்பவரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். 22 வயதான பெண் ஒருவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட 911 அவசர அழைப்பின் எதிரொலியாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

இவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், இவரினால் வேறு பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கவலை வெளியிட்டனர்.

நிதர்ஷன் எலன்சூரியநாதன் முன்னரும் காவல்துறையினரால் வேறு குற்றச் சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர். 2016ஆம் ஆண்டு Toronto காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டவர். மேலும் இரண்டு தமிழர்களுடன் இணைந்து 2015ஆம் ஆண்டில் Scarboroughவில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு விவரங்கள் வெளியாகின

Lankathas Pathmanathan

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

Leave a Comment