தொடரும் பாலியல் வன்கொடுமை உட்பட மூன்று குற்றச் சாட்டுகளில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா என்பவர் செவ்வாய் (06) கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Woodbine கடற்கரை பகுதியில் July மாதம் 7ஆம் திகதி மூன்று பேர் அடங்கிய குழுவினரை தனது படகில் ஏற்றிய இவர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் மீது இம்முறை பின்வரும் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன:
1. Sexual Assault
2. Forcible Confinement
3. Indecent Act
இவர் ஏற்கனவே இதே போன்றதொரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு July மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார். Woodbine கடற்கரை பகுதியில் July மாதம் 11ஆம் திகதி இருவரை பாலியல் வன்கொடுமை செய்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பின்வரும் குற்றச்சாட்டுக்கள் பதிவாகின:
1. Two counts of Kidnapping
2. Two counts of Sexual Assault
3. Two counts of Forcible Confinement
4. Operation of a Conveyance with Ability Impaired
5. Operation of a Conveyance with more than 80 mgs of Alcohol in Blood
இதனை ஒரு தொடரும் பாலியல் வன்கொடுமை விசாரணை எனக்கூறும் காவல்துறையின இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இவர் உபயோக்கிக்கும் படகின் விபரங்களும் புகைப்படமும் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
22-foot, Rinker power boat and is yellow/white in colour.
குற்றம் சாட்டப்பட்டவர் பல படகுகளை வைத்திருப்பவர் எனக் கூறும் காவல்துறையினர் இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.