December 12, 2024
தேசியம்

Category : உள் உணர்ந்து

உள் உணர்ந்துகட்டுரைகள்

வெல்லப்போவது யார்?

Gaya Raja
கனேடிய பொதுத் தேர்தல் களம் COVID-19 தொற்றின் வசம் சிக்குண்டுள்ளது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் தொற்று, அரசியல் நிலப்பரப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சில வாரங்களில் மற்றொரு வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், தொற்று மீட்புத்...
உள் உணர்ந்து

கனடா: தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது அரசியல் இல்லை!

Gaya Raja
COVID பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கல் கனடா முழுவதும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அமெரிக்காவைப் போலல்லாமல் கனேடியர்கள் தடுப்பூசி பெறுவதற்கு பரவலாக ஆதரவளிப்பதை அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவைப் போலல்லாமல் தடுப்பூசி...
உள் உணர்ந்து

கனடா: தடுப்பூசி வழங்கலில் தோல்வி !

Gaya Raja
COVID தடுப்பூசிகள் விடயத்தில் கனடா தோல்வியுறுகிறது –இதற்கான பொறுப்பை Justin Trudeau ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக எதிர்கொள்ளப்படும் அனைத்து பின்னடைவுகளுக்கும் பிரதமர் அலுவலகமே பொறுப்பு என இதை அர்த்தப்படுத்த தேவையில்லை. தொற்றைக் கையாள்வதற்கான உலகளாவிய மாதிரியாக ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட ஒரு நிர்வாகம் இப்போது உலகளாவிய பரிதாபத்தின் உதாரணமாக தன்னைக் காண்கிறது என்பது தான் இதன் பொருள்.  தொற்றை எதிர்கொள்ளல் குறித்த கனடாவின் நற்பெயர் எப்போதுமே ஒரு வகையில் மிகவும் உயர்த்தப்பட்டு ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது – இதுவே கனடாவின் சவாலாகவும் அமைந்துள்ளது. ஒரு நாடு தடுப்பூசி கொள்வனவை எவ்வாறெல்லாம் தவறாக கையாள முடியுமோ அவ்வாறெல்லாம் தவறாக கையாண்ட பெருமை கனடாவைச்  சாரும். கடந்த ஆண்டின் கோடையில் தொற்றின் பரவலையும் – தடுப்பூசிகளின் முன் கொள்வனவையும் கையாண்ட விடயத்தில் பாராட்டுக்களின் உச்சத்தை கனடா எட்டியது. ஆனாலும் தடுப்பூசிகளை வழங்குதல் என்ற விடயத்தில் கனடாவின் நிலை, உலக அரங்கில் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதிகளவில் தடுப்பூசிகளை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கனடா முன்பதிவு செய்த போதிலும் அவை கனடாவை வந்தடைவதில் பெரும் தாமதம் எதிர்கொள்ளப்படுகின்றது.  இது ஒரு தொடர் கதையாகவே உள்ளது. உலக நாடுகளின் விகிதத்தில் கனடா தனது குடிமக்களுக்கு தடுப்பூசியை வழங்கவில்லை – இதை உலகலாவிய ரீதியில் தடுப்பூசிகளின் வழங்கலோடு  ஒப்பிடும்போது  புள்ளிவிபரங்களே எடுத்தியம்புகின்றன. இந்த பகுதி எழுதப்பட்டு அச்சுக்கு செல்லும் காலப்பகுதியில் கனடா உலகலவிய ரீதியில் தடுப்பூசி வழங்குவதில் 35 முதல் 40ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கனடாவிற்கு ஒரு மிகப்பெரிய தோல்விதான் – இதை வேறெந்த வகையிலும் பதிவிடமுடியாது. சீன தடுப்பூசி உற்பத்தியாளரான CanSinoவுடனான ஆரம்ப ஒப்பந்தம், சீன அரசாங்கம் விநியோகத்தை தடுத்த போது தடம்புரண்டது. கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அண்மைய கால இருண்ட உறவுகளுக்கு மத்தியில் இது எதிர்பார்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயமாகும். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக Trudeau அரசாங்கம், சீன அரசின் இந்த முடிவை எதிர்கொள்ள தன்னை தயார் படுத்தவில்லை. அன்றில் இருந்து கனடாவிற்கு அனைத்தும் இறங்கு முகம் தான். Pfizer, Moderna போன்ற தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் கனடா மெதுவான வேகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.April மாதத்திற்கு முன்னர் பெரிய அளவிலான தடுப்பூசி தயாராக இருக்காது அல்லது வழங்கப்படாது என்ற யதார்த்த நிலையை ஏற்றும் கொண்டது.  உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகள் December மாதத்தில் தடுப்பூசியை வழங்க ஆரம்பித்தபோது கனடா செய்வதறியாது இருந்தது – இன்றும் அப்படியே இருக்கிறது. 2021 March தேசியம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம் ...