அமெரிக்காவுக்கு கனடாவின் இருக்குமதிகளின் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார்.
கனடிய எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் அல்லது மரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என Donald Trump கூறினார்.
உலக பொருளாதார மன்றத்தில், உலகின் மிக சக்திவாய்ந்த வணிக, அரசியல் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய போது இந்த கருத்தை அவர் முன்வைத்தார்.
ஏனைய நாடுகளிடமிருந்து மரியாதையை அமெரிக்கா எதிர்பார்க்கிறது என கூறிய அவர் பல ஆண்டுகளாக கனடாவை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறக்கூடும் என்ற தனது ஆலோசனையையும் Donald Trump மீண்டும் வலியுறுத்தினார்.
February 1 முதல் விதிக்கப்படும் கனடிய இறக்குமதிகளுக்கான 25 சதவீத வரிகளில் இருந்து தப்பிக்கும் வழி இது எனவும் அவர் கூறினார்.
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா வரிகளை அறிவித்தால், கனடா அதற்கு பதில் நடவடிக்கையை முன்னெடுக்கும் என கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.