அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் Donald Trump கனடிய பொருட்களுக்கு எதிராக வரிகளை விதிக்க மாட்டார் என தெரியவருகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார்.
புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க Donald Trump எச்சரித்து வந்துள்ளார்.
அவரது பதவி ஏற்றிப்பு உரையில் இந்த வரி விதிப்பு விபரங்களும் அடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் பதவியேற்றவுடன் அவர் கனடிய பொருட்களுக்கு எதிராக வரிகளை விதிக்க மாட்டார் என கூறப்படுகிறது.
வர்த்தக பற்றாக்குறையை ஆய்வு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு Donald Trump உத்தரவிடுவார் என தெரியவருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியினால் வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு பதிலளிக்க கனடிய மத்திய அரசு தயாராக உள்ளது.