தேசியம்
செய்திகள்

Quebec Liberal கட்சி தலைமை போட்டி ஆரம்பம்

Quebec மாகாண Liberal கட்சி தலைமை பதவிக்கான போட்டி திங்கட்கிழமை (13)  உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது.

தனது பதவியில் இருந்து விலகுவதாக Dominique Anglade அறிவித்த நிலையில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

2022 Quebec மாகாண சபை தேர்தலில் Quebec மாகாண Liberal கட்சி எதிர்கொண்ட தோல்வியை அடுத்து அதிகரித்த விமர்சனங்களுக்கு மத்தியில் Dominique Anglade பதவி விலகினார்.

இந்த தேர்தலில் Liberal கட்சி 21 ஆசனங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இது 1956 ஆம் ஆண்டின் பின்னர் Liberal கட்சி பெற்ற மிக குறைந்த ஆசனங்களின் எண்ணிக்கையாகும்.

அதிகாரப்பூர்வமாக திங்கள் ஆரம்பிக்கும் போட்டியில் தலைமை பதவியை வெற்றி பெற விரும்பும் வேட்பாளர்கள் April 11, 2025 வரை தங்கள் நியமங்களை பதிவு செய்யலாம்.

இதுவரை நான்கு பேர் இந்த தேர்தலில் போட்டியிடும் தமது எண்ணத்தை வெளிப்படுத்தி தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த தேர்தலின் வாக்குப்பதிவு காலம் June 9 முதல் 14, 2025 வரையாகும்.

May 20 கட்சியின் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்.

Quebec Liberal கட்சி மாகாணத்தின் பழமையான அரசியல் கட்சியாகும்.

Quebec மாகாணத்தில் அதிக காலம் அதிகாரத்தில் இருந்த  கட்சியும் அதுவாகும்.

Related posts

சுகாதார கட்டமைப்பு அழுத்தங்களை எளிதாக்க நடவடிக்கை எடுக்க முடியும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Quebec மாகாண பற்றாக்குறை $11 பில்லியன்

Lankathas Pathmanathan

Alberta தேர்தல் முடிவு குறித்து அரசியல்வாதிகள் கருத்து

Lankathas Pathmanathan

Leave a Comment