கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கும் Donald Trumpபின் அச்சுறுத்தலுக்கு எதிராக கனடிய அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க எச்சரித்து வருகின்றார்.
கனடிய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தால் அது இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கனடிய பிரதமர் Justin Trudeau அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை அமெரிக்கா இது போன்ற ஒரு நடவடிக்கையை முன்னெடுத்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவில் வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை கனடிய அதிகாரிகள் தயாரித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் கனடிய பிரதமர்கள் Stephen Harper Jean Chretien ஆகியோரும் Donald Trump முன்வைக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
Alberta முதல்வர் Danielle Smith, Ontario முதல்வர் Doug Ford, உட்பட பல கனடிய முதல்வர்களும் Donald Trumpபின் அச்சுறுத்தலுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க முயன்று வருகின்றனர்.