தொடரும் Canada Post வேலை நிறுத்தம் காரணமாக கடவுச்சீட்டு சேவைகளில் பெரும் தாமதங்கள் எதிர்கொள்ள படுகின்றன.
நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு வாரங்களாக தொடர்கிறது.
தொடரும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக 85,000 கடவுச்சீட்டுகளை தபால் மூலம் அனுப்புவதை Service Canada நிறுத்தி வைத்துள்ளது.
Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் Service Canada கடவுச்சீட்டுகளை தபால் மூலம் அனுப்புவதை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தபால் சேவை மீண்டும் ஆரம்பிக்கும் போது கடவுச்சீட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தபால் சேவைகள் வழமைக்கு திரும்பும் வரை கனடியர்கள் Service Canada மையங்களில் தமது கடவுச்சீட்டுகளை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
November 15 முதல் Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.