தேசியம்
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவு

Markham நகரில் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவடைந்தன.

McCowan Road – 14th Avenue சந்திப்புக்கு அருகாமையில் பார்த்தீபன் பஞ்சலிங்கம் கடந்த மாதம் 19ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது இல்ல வாசலில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கையில் மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்ட 44 வயதான இவரது கொலை ஒரு இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

இந்த இறுதி நிகழ்வு நடைபெற்ற மண்டப பகுதியில் பெருமளவிலான காவல்துறையினரின் பிரசன்னம் இருந்தது என தெரியவருகிறது.

இவரது கொலை குறித்து புலனாய்வாளர்கள் குறைந்தது ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

ஆனாலும் இதில் தொடர்புடைய சந்தேக நபர்களின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவரது கொலை Toronto பெரும்பாகத்தில் அண்மையில் tow truck தொழில் துறையில் அதிகரித்து வரும் வன்முறையின் எதிரொலியாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இவரது பெயரில் ஒரு நபர் 2018 இல் Toronto நகரில் tow truck ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வாகனம் குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.

இதில் 2002 முதல் 2009 வரையிலான வெள்ளை நிற GMC Envoy வாகனம் ஒன்றை York பிராந்திய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த விபரம் அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Related posts

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாரத்தில் இரண்டாவது தடவை தோல்வி?

Lankathas Pathmanathan

Quebec Liberal கட்சியின் புதிய தலைவர் 2025 வரை நியமிக்கப்பட மாட்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment