December 12, 2024
தேசியம்
செய்திகள்

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்: Liberal நாடாளுமன்ற குழு

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துவதாக Liberal அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுவினர் தெரிவித்தனர்.
பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகளுக்கு மத்தியில் புதன்கிழமை (31) நடைபெற்ற Liberal நாடாளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் இந்தக் கருத்து வெளியானது.
பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தம் கட்சியின் சிலர் மத்தியல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பதவி விலக அழைப்பு விடுக்கும் கடிதத்தில் 24 நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அண்மையில் கையொப்பமிட்டதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் பிரதமரின் தலைமை குறித்து ஒரு இரகசிய வாக்கெடுப்புக்கான அழைப்புகள் சில கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வெளியாகி வருகிறது.
இதற்கு அனுமதிக்க தானும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் முன்மொழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் Yvan Baker புதன்கிழமை கூறினார்.
பிரதமரிடமிருந்து இதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை  என அவர் மேலும் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற Liberal நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த இரகசிய வாக்கெடுப்பு விடயம் கலந்துரையாட படவில்லை என தெரியவருகிறது.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith தெரிவித்தார்.
இந்த இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
கட்சி தலைவரை Liberal கட்சியினர் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதற்கு இந்த இரகசிய வாக்கெடுப்பு முறை எதிரானது என சுகாதார அமைச்சர் Mark Holland  கூறினார்.
எங்கள் கட்சியில் தலைமைத்துவ செயல்முறையை தீர்மானிக்கும் ஒரு அரசியலமைப்பு எங்களிடம் உள்ளது” என கூறிய அவர், பிரதமருக்கான ஆதரவு நாடாளுமன்ற குழுவின் மத்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது கட்சியை அடுத்த தேர்தலில் வழி நடத்த உள்ளதாக Justin Trudeau தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan

Leave a Comment