தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மான தோல்வி

Conservative கட்சியின் மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Justin Trudeau தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்றது.

ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Conservative கட்சி தோல்வியடைந்தது.

பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி கடந்த வியாழக்கிழமை (26) சபையில் முன்வைத்தது.

இந்த புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

ஏற்கனவே புதன்கிழமை (25) வாக்களிப்புக்கு விடப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்த புதிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி சமர்ப்பித்தது.

Conservative கட்சியின் இந்த புதிய  நம்பிக்கையில்லா தீர்மானம் 207-121 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Related posts

LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் 100 மில்லியன் டொலர் முதலீடு

Lankathas Pathmanathan

கனடா தின வார இறுதியில் 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் பாதிப்பு?

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment