தேசியம்
செய்திகள்

மீண்டும் இடைத் தேர்தல் சவாலை எதிர்கொள்ளும் Justin Trudeau?

Montreal இடைத் தேர்தலில் Justin Trudeauவின் Liberal கட்சி மற்றொரு சவாலை எதிர்கொள்கின்றனர்.

LaSalle–Emard–Verdun தொகுதியின் இடைத் தேர்தல் இந்த மாதம் 16ஆம் திகதி நடைபெறுகிறது

நீண்ட காலம் Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய இந்தத் தொகுதியை வெற்றிகொள்ள NDP, Bloc Québécois கட்சிகள் முயல்கின்றன.

இந்த இடைத்தேர்தலை Justin Trudeau மீதான வாக்கெடுப்பாக வாக்காளர்கள் கருதுகின்றனர்.

அண்மையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரதிநிதித்துவப்படுத்திய Toronto-St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

LaSalle-Emard-Verdun தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள்  நீதியமைச்சர் David Lametti விலகிய நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Related posts

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை கனடா ஆதரிக்கவில்லை: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment