கடந்த Olympic போட்டியை விட அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் இம்முறை கனடா உள்ளது.
2024 Paris Olympics போட்டியின் ஒன்பதாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (04) போட்டிகளின் முடிவில் கனடா ஐந்து தங்கம், நான்கு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் பதினேழு பதக்கங்கள் வெற்றி பெற்றுள்ளது.
Tokyo Olympics போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வென்ற 24 பதக்கங்களை விட இம்முறை கனடா அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
கனடிய விளையாட்டு வீரர்கள் முதல் ஒன்பது நாள் போட்டிகளில் இம்முறை ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பதக்கத்தை வென்றுள்ளனர்.
Toronto நகரை சேர்ந்த நீச்சல் வீராங்கனை Summer McIntosh, மூன்று தங்கம் உட்பட இம்முறை நான்கு பதக்கங்களை வென்று கனடிய அணியை முதன்மை வகிக்கின்றார்.