குறுகிய கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை கனடாவில் 2017ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (30) வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விபரம் வெளியானது.
கனடாவில் மொத்த குறுகிய கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை 2017 முதல் 2023 வரையிலான காலத்தில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த வாடகை வீடுகளை நீண்ட கால உபயோகத்திற்கான வீடுகளாக பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.