கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Melanie Joly சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சீன அரசின் அழைப்பின் பேரில் Melanie Joly வெள்ளிக்கிழமை (19) சீனா பயணமாகிறார்.
கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த பயணத்தை உறுதிப்படுத்தியது.
இந்த பயணத்தில் Melanie Joly சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yiயுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அமைச்சர்களும் இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட விடயங்களை விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் இந்த பயணம் நிகழ்கிறது.