தேசியம்
செய்திகள்

மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐவர் கைது!

மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Peel பிராந்திய காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில் ஐவர் கைதாகியுள்ளனர்.

இவர்கள் தொடர்ச்சியான வன்முறை மூலம் பலரையும் மிரட்டி பணம் பறித்ததாக காவல்துறையினர் கூறினர்.

2023 December முதல் இந்த ஆண்டு May மாதம் வரை இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

Peel பிராந்தியத்திலும், Toronto  பெரும்பாகத்திலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கி உள்ளதாகவும், அவர்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளதாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் கைதானவர்கள்:

  • Brampton நகரை சேர்ந்த 36 வயதான Dupinderdeep Cheema,
  • Brampton நகரை சேர்ந்த 51 வயதான Beant Dhillon,
  • Mississauga நகரை சேர்ந்த 39 வயதான Arundeep Thind,
  • Mississauga நகரை சேர்ந்த 32 வயதான Mustapha Alawiye,
  • Mississauga நகரை சேர்ந்த 32 வயதான  Kymani Hassakourinas.

இவர்கள் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

தெற்காசிய வணிக சமூகத்தை குறிவைத்து பல பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பாக Peel காவல்துறையினர் கடந்த December மாதம் ஒரு விசாரணையை ஆரம்பித்தனர்.

இப்போது அறிவிக்கப்பட்ட கைதுகள் கடந்த December மாதம் ஆரம்பமான விசாரணையுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தற்போது கைதாகி உள்ளவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan

கனடாவில் சராசரி வீட்டு வாடகை இந்த ஆண்டு 15.4 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

காசாவை விட்டு வெளியேற மறுக்கப்படும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment