தேசியம்
செய்திகள்

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முகாமை அகற்ற தடை உத்தரவு

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாமை அகற்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை போராட்ட முகாமை அகற்ற Ontario நீதிபதி  செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார்.

இந்த போராட்டம் காரணமாக Toronto பல்கலைக்கழகம் ஈடுசெய்ய முடியாத பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என நீதிபதி Markus Koehnen தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

புதன்கிழமை (03) மாலை 6 மணிக்குள் கூடாரங்களை அகற்றுமாறு செவ்வாய் பிற்பகல் வெளியிடப்பட்ட தடையில் போராட்டக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதை தடை செய்வது, புதிய கூடாரங்களை அமைப்பது உட்பட அனுமதியின்றி பல்கலைக்கழக தளத்தைப் பயன்படுத்துவதை இந்த நீதிமன்ற உத்தரவு தடை செய்கிறது.

இந்த உத்தரவை மீறும் எவரையும் கைது செய்வதற்கான அதிகாரத்தையும் இந்த உத்தரவு காவல்துறைக்கு வழங்குகிறது.

Related posts

New Brunswick கல்வி அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Manitobaவின் முதல்வர் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment