தேசியம்
செய்திகள்

முன்னாள் கனடிய தமிழர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகிறார்?

முன்னாள் கனடிய தமிழர் ஒருவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுகிறார்.

கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இரா.சம்பந்தன் ஞாயிற்றுக்கிழமை (30) மரணமடைந்தார்.

இவரது மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்துக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுகிறார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் திருமலை மாவட்டத்தில்  போட்டியிட்டு  இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை (16,170) சண்முகம் குகதாசன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலை மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவர் சண்முகம் குகதாசனை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) நாடாளுமன்றம் கூடும் போது சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுக்கவுள்ளார்.

 

Related posts

COVID பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிகமாக 8.1 பில்லியன் டொலர்கள்: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

Iqaluit நகரில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தின் புதிய முதல்வரும் அமைச்சரவையும் பதிவியேற்ப்பு!

Gaya Raja

Leave a Comment