தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு $5 பில்லியன் கடனாக வழங்கும் கனடா?

கனடிய அரசாங்கம் உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

G7 நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் நிலையில் இந்த தகவல் வெளியானது.

இத்தாலியில் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டின் முதல் நாளில் இந்த தகவல் வெளியானது.

உக்ரைனுக்கு கடனாக 5 பில்லியன் டொலர்களை வழங்க கனடா தயாராக இருப்பதாக அரசாங்கத்தின்  மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

G7 தலைவர்கள் இந்த கடன் குறித்து கலந்துரையாடுவதாக அந்த அதிகாரி கூறினார்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய G7 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் சந்திக்கின்றனர்.

G7 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கனடிய பிரதமர் Justin Trudeau, உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

Related posts

West Edmonton வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: Jennifer McKelvie உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment