கியூபாவிற்கு அருகே உள்ள ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக கனடிய தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்துகிறது.
கனடிய ஆயுதப்படைகள் ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கியூபா கடற்பரப்பை ரஷ்ய போர்க் கப்பல்கள் புதன்கிழமை (12) சென்றடைந்தன.
இந்தக் கப்பல்களின் செயல்பாடுகளை கனடிய ஆயுதப்படைகள் கண்காணித்து வருகின்றன.
வட அமெரிக்காவை பாதுகாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தக் கண்காணிப்பு அமைகிறது என கனடிய தேசிய பாதுகாப்பு துறை கூறுகிறது.