தமிழர்கள் அதிகம் வாழும் Scarborough தொடர் மாடி கட்டிடம் வெளியேற்றப்பட்டது.
அதிக அளவில் carbon monoxide கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து இந்த தொடர் மாடி கட்டிடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Markham வீதியில் நெடுஞ்சாலை 401க்கு தெற்கே உள்ள 30 Tuxedo Ct தொடர் மாடி கட்டிடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை (11) காலை இந்த கசிவு முதலில் கண்டறியப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.